Kathir News
Begin typing your search above and press return to search.

பல வளங்கள் இருந்தும் தமிழகம் ஏன் முதலீடுகளை ஈர்க்கவில்லை - கேள்வி எழுப்பும் ஆளுநர் ஆர்.என்.ரவி

பல வளங்கள் இருந்தும் தமிழ்நாடு முதலீடுகளை ஈர்க்க முடியவில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

பல வளங்கள் இருந்தும் தமிழகம் ஏன் முதலீடுகளை ஈர்க்கவில்லை - கேள்வி எழுப்பும் ஆளுநர் ஆர்.என்.ரவி

Mohan RajBy : Mohan Raj

  |  1 July 2022 7:21 AM GMT

பல வளங்கள் இருந்தும் ஏன் தமிழ்நாடு முதலீடுகளை ஈர்க்க முடியவில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் சிறந்த மனிதவள மேலாண்மை துறை அலுவலர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

ஆளுநர் கூறும் பொழுது, '2047 இல் நூறாவது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது பல மடங்கு வளர்ச்சி பெற்ற நாடாக இந்தியா இருக்கும்' என தெரிவித்தார்.


மேலும் பேசிய அவர், 'பலவித வளங்கள் இருந்தும் மகாராஷ்டிரா, ஹரியானா போல ஏன் தமிழ்நாட்டினால் முதலீடுகளை ஈர்க்க முடியவில்லை? என கேள்வி எழுப்பினார் இந்தியாவுக்காக தமிழ்நாடு வளர வேண்டும் என முன்னேறிச் செல்ல வேண்டும் எனவும் அதற்கு அனைவரும் ஒற்றுமையாக ஒத்துழைக்க வேண்டும்' எனவும் கேட்டுக் கொண்டார்.


Source - News 18 Tamil Nadu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News