Kathir News
Begin typing your search above and press return to search.

ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பிறந்த நாள்: அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் வாழ்த்து கடிதம்.!

புதுச்சேரி துணை நிலை ஆளுநரும், தெலங்கானா மாநில ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் இன்று 61வது அகவையில் அடியெடுத்து வைக்கிறார்.

ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பிறந்த நாள்: அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் வாழ்த்து கடிதம்.!

ThangaveluBy : Thangavelu

  |  2 Jun 2021 4:16 AM GMT

புதுச்சேரி துணை நிலை ஆளுநரும், தெலங்கானா மாநில ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் இன்று 61வது அகவையில் அடியெடுத்து வைக்கிறார்.

இந்நிலையில், தமிழக முன்னாள் துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், மேதகு ஆளுநர் அவர்களுக்கு வணக்கம்.




அறுபது ஆண்டுகள் முடிந்து 61வது அகவையில் அடியெடுத்து வைக்கும் இந்த நன்னாளில், தங்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, எண்ணியது அனைத்திலும் தொடர்ந்து வெற்றி கண்டு, எண்ணம் போலவே வாழ்க்கை சிறந்து விளங்க வேண்டும் என்று மனதார வாழ்த்துக்கிறேன்.

இந்த நன்னாளில், தங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் தொடர்ந்து ஆண்டவன் அருள வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் வெளியிட்டுள் வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News