Kathir News
Begin typing your search above and press return to search.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன கலைக்கல்லூரி பவள விழா. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்பு !

மயிலாடுதுறையில் சைவ மடங்களில் ஒன்றான தருமபுரி ஆதீனம் உள்ளது. இந்த ஆதீனம் தமிழ் வளர்ச்சி மற்றும் கல்வி மருத்துவம் சார்ந்த பணிகளுக்காக உதவிகளை செய்து வருகிறது. சமுதாயத்திற்காக அனைத்து வகையிலும் உதவி புரிந்து வருகிறது.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன கலைக்கல்லூரி பவள விழா. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்பு !

ThangaveluBy : Thangavelu

  |  2 Aug 2021 2:06 PM GMT

மயிலாடுதுறை தருமபுரி ஆதீன கலைக்கல்லூரி பவள விழாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார்.

மயிலாடுதுறையில் சைவ மடங்களில் ஒன்றான தருமபுரி ஆதீனம் உள்ளது. இந்த ஆதீனம் தமிழ் வளர்ச்சி மற்றும் கல்வி மற்றும் மருத்துவம் சார்ந்த பணிகளுக்காக உதவிகளை செய்து வருகிறது. சமுதாயத்திற்காக அனைத்து வகையிலும் உதவி புரிந்து வருகிறது.


இந்த கல்லூரி தருமபுரி ஆதீனத்தால் கடந்த 1946ம் ஆண்டு 25வது குருமகா, சந்நிதானத்தால் செந்தமிழ்க் கல்லூரியாகத் தொடங்கப்பட்டது. 26வது குருமணிகளால் 1988ம் ஆண்டு முதல் கலைக்கல்லூரியாக வளர்ச்சி பெற்று தற்போது 27வது கயிலை ஸ்ரீ நட்சத்திர குருமணிகளால் புரந்தருளப் பெறும் தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி தற்போது பவளவிழா ஆண்டில் அடியெடுதுது வைத்துள்ளது.

இதனை கொண்டாடும் வகையில் தருமபுர ஆதீனம் கலைக்கல்லூரியின் பவளவிழா துவக்க விழா ஆதீன மடத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.


நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆதீனம் சார்பில் பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டு மேளதாளத்துடன் வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தருமபுர ஆதீனம் 27வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளிடம் ஆசி வாங்கினார். ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆதினம் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News