நடுரோட்டில் பழுதான ஆம்புலன்ஸ், கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்பட்ட நிலைமை என்ன? - தமிழகத்தில் நடந்ததால் அமைதியான சமூக வலைதளம்
அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் நடுரோட்டில் பழுது காரணமாக கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஈடுபட்ட நிலைமை என்ன?
By : Bharathi Latha
சீர்காழி அருகே கர்ப்பிணி பெண்ணை அழைத்து சென்ற 108 ஆம்புலன்ஸ் பழுதாகி நடுரோட்டில் நின்றுதால், சுமார் ஒரு மணி நேரம் கழித்து மாற்று ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் பகுதியில் சேர்ந்தவர்கள் அஞ்சலி. கர்ப்பிணி பெண்ணுக்கு வலி ஏற்பட்டதால் திருமுல்லைவாசல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருக்கிறார்.
ஆனால் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டதால் 108 ஆம்புலன்ஸ் மூலம் கர்ப்பிணிப் பெண் அஞ்சலியை அழைத்து சென்ற பொழுது, நடுவழியில் 108 ஆம்புலன்ஸ் திடீரென்று பழுதாகி நின்றது. இதனால் அஞ்சலி என்ற கர்ப்பிணி பெண் பெரும் அவஸ்தை அடைந்தார்.
மேலும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மாற்ற ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்துவிட்டு அதற்கு சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். பழுதை சரி செய்ய முடியாத காரணத்தோடு தாமதமாகவே, 45 நிமிடங்கள் கழித்து வேறு ஒரு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், மேலும் இவர்கள் மாற்று ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு காத்துக் கொண்டிருக்கிற நேரம் குறித்து வீடியோ இணைய தளத்தில் ஒன்று வழியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Input & Image courtesy: Dinamani