Kathir News
Begin typing your search above and press return to search.

தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பட்டதாரிகள்.!

தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் பணி வழங்கக்கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு பட்டதாரிகள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பட்டதாரிகள்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  24 Jun 2021 2:17 PM IST

தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் பணி வழங்கக்கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு பட்டதாரிகள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆட்சேர்ப்பு நிலையத்தின் மூலமாக மாவட்டத்தில் வங்கி உதவியாளர் பணிக்கு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி எழுத்துத் தேர்வும், ஜனவரி 27, 29ம் தேதிகளில் நேர்முகத்தேர்வும் நடைபெற்றது.

மேலும், பிப்ரவரி மாதம் 25ம் நாள் இறுதி தேர்வு பட்டியலும் இணையதளங்களில் வெளியானது. அதே போன்று மாவட்ட ஆட்சேர்ப்பு தலைவர் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஆணைகள், 26ம் தேதி தபால் மூலமாக அனுப்ப்பட்டது.




ஆனால் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்படும் என தெரிவித்து அனுப்பி வைத்தனர். பின்னர் தேர்தல் அறிவிக்கப்பட்டதில், தேர்தல் விதிமுறைகளை காட்டி ஆணைகள் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. தற்போது தேர்தல் முடிந்தும் புதிய அரசு பதவி ஏற்று 50 நாட்களை கடந்து விட்டது. ஆனால் 111 பட்டதாரிகளுக்கு பணி நியமனம் செய்யவில்லை என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திடீரென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகம் முன்பாக பரபரப்பான சூழல் நிலவியது. ஏற்கனவே கொரோனா தொற்று பரவல் உள்ள நிலையில், பட்டதாரி இளைஞர்களை அலைக்கழிக்கும் மாவட்ட நிர்வாகத்தினருக்கு பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News