Kathir News
Begin typing your search above and press return to search.

வேலூர் இளவம்பாடி முள் கத்திரிக்காவிற்கு புவிசார் குறியீடு: விவசாயிகள் மகிழ்ச்சி!

வேலூர் மாவட்டத்தின் இலவம்பாடி முள் கத்தரிக்காவிற்கு தற்பொழுது புவிசார் குறியீடு கிடைத்து இருக்கிறது.

வேலூர் இளவம்பாடி முள் கத்திரிக்காவிற்கு புவிசார் குறியீடு: விவசாயிகள் மகிழ்ச்சி!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  27 Feb 2023 3:39 AM GMT

இந்தியாவில் உள்ள பல்வேறு பகுதிகளில் அதனுடைய இயற்கை அமைப்பிற்கு ஏற்றவாறு பல்வேறு பொருட்கள் சிறப்பு மற்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. வேறு எந்த ஒரு இடத்திலும் அல்லது எந்த ஒரு பகுதியிலும் கிடைக்காத அளவிற்கு ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் தான் அத்தகைய சிறப்பு வாய்ந்த பொருட்கள் கிடைக்கின்றன. அதற்கு புவிசார் குறியீடு கொடுத்து சிறப்பு அங்கீகாரம் கொடுப்பது வழக்கம். குறிப்பாக தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் மதுரை மல்லி, திருநெல்வேலி அல்வா, திண்டுக்கல் பூட்டு போன்ற பல்வேறு பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்று வரை இருக்கிறது. அந்த வகையில் தற்பொழுது வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா இலவம்பாடியில் ஏராளமான விவசாயம் செய்து வருகிறார்கள்.


எங்களுடைய முக்கிய தொழிலாக முள் கத்திரிக்காய் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த முள் கத்திரிக்காவிற்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட காலமாக கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று இந்த முள் கத்திரிக்காவிற்கு போலீசார் குறியீடு வழங்கியதால் விவசாயிகள் தற்பொழுது மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள். வேலூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் மோகன் அவர்கள் இது பற்றி கூறுகையில், வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு பகுதிகளில் சுமார் 300 ஹெக்டார் பரப்பளவில் சுமார் 750 ஏக்கர் இலவம்பாடி கத்தரிக்காய் விளைவிக்கப்படுகிறது. இதனை 450 விவசாயிகள் பயிரிட்டு வருகிறார்கள்.


இவை கிலோ ஒன்று இருக்கு 60 முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது சாதாரண வெப்பநிலையின் மூன்று நாட்கள் குளிரூட்டப்பட்டு சுற்றுப்புறத்தில் எட்டு நாட்கள் நன்றாக இருக்கும். இயற்கையான முறையில் இவற்றுக்கு உரம் கொடுக்கப்பட்டு நன்றாக வளர்க்கப்பட்டு வரும், இந்த கத்திரிக்காவிற்கு தற்பொழுது புவிசார் குறியீடு கிடைத்து இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News