Kathir News
Begin typing your search above and press return to search.

இந்திய அளவில் மீண்டும் முதலிடம் பெறும் தமிழகம்: எதற்கு?

இந்திய அளவில் மீண்டும் முதலிடம் பெறும் தமிழகம்: எதற்கு?

இந்திய அளவில் மீண்டும் முதலிடம் பெறும் தமிழகம்: எதற்கு?

Rama SubbaiahBy : Rama Subbaiah

  |  16 Dec 2020 10:00 AM GMT

என்ற பெயரில், இந்தியாவில் முதல் முறையாக டிஜிட்டல் முறையில் தொலை தொடர்பு மருத்துவ சேவை வழங்கப்பட்டது. கொரோனா காலத்தில் மக்கள் வெளியே செல்ல முடியாத நேரத்தில் இத்திட்டம், மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

நாடு முழுவதும் 550க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளிகள் இ-சஞ்சீவனியை பயன்படுத்துகின்றனர். இவர்களில் 10 சதவீதம் பேர் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள். 4ல் ஒரு பங்கு நோயாளிகள், ஒன்றுக்கு மேற்பட்ட முறை, இச்சேவையை பயன்படுத்தியுள்ளனர். இது தொலை தொடர்பு மருத்துவ சேவையை, மக்கள் விரும்புவதை காட்டுகிறது.

கேரளாவில், பாலக்காடு சிறையில் உள்ள கைதிகளுக்கு சுகாதார சேவைகள் வழங்க இ-சஞ்சீவனி பயன்படுத்தப்படுகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள முதியோர் இல்லத்திலும் இந்த சேவை பயன்படுத்தப்படுகிறது. நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு 14,000 பேர் இ-சஞ்சீவனி மூலம் மருத்துவ ஆலோசனை பெறுகின்றனர்.

நாட்டில் உள்ள 10 மாநிலங்கள் இ-சஞ்ஜீவனி ஓபிடி சேவையை அதிக அளவில் பயன்படுத்துகின்றன. அதில் முதல் இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்திலிருந்து இது வரை 3,19,507 மருத்துவ ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன. 2வது இடத்தில் உள்ள உத்தரப் பிரதேசம் 2,68,889 ஆலோசனைகளை பெற்றுள்ளது. மத்தியப் பிரதேசம் 79,838 ஆலோசனைகளை பெற்றுள்ளது.

இந்நிலையில் இ-சஞ்ஜீவனி் தொலை தொடர்பு மருத்துவ சேவை, ஆலோசனை வழங்குவதில் இன்று 10 லட்சத்தை கடந்து சாதனை படைத்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News