எடப்பாடிக்கு ஓகே சொன்ன தி.மு.க அரசு - அதிர்ச்சியில் அரசியல் தலைவர்கள்!
தமிழக முன்னாள் முதலமைச்சரும், சட்டசபை எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள அரசு பங்களாவில் தொடர்ந்து தங்குவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
By : Thangavelu
தமிழக முன்னாள் முதலமைச்சரும், சட்டசபை எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள அரசு பங்களாவில் தொடர்ந்து தங்குவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரசு பங்களாக்கள் உள்ளது. இதில் முதலமைச்சர்கள், அமைச்சர்கள், நீதிபதிகள் என பலரும் தங்கியுள்ளனர். தற்போது புதிதாக திமுக ஆட்சி அமைந்ததால், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்களின் பங்களாக்களை காலி செய்து விட்டனர்.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இன்னும் அங்கேயே தங்கியுள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் சகோதரர் காலமானதால் அவர் பங்களாவை காலி செய்ய காலஅவகாசம் கேட்டுள்ளார். இதனால் அவருக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் தங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.