அத்தியாவசிய மளிகை பொருள் பொருளின் விலை உயர்வு: தவிர்க்கும் தமிழக மக்கள்!
சென்னையில் தற்போது அதிக வசியமான மளிகை பொருள் விலைகள் உயர்ந்துள்ளது.
By : Bharathi Latha
தமிழகத்தில் தற்போது பல்வேறு விலைகள் அதிகமாகவே விற்கப்படுகின்றது. இந்த விலைவாசி உயர்வு காரணமாக ஏழை குடும்பத்தைச் சேர்ந்த மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த 15 நாட்களாக பெட்ரோல், டீசல் விலைகள் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வீரமாக வீடுகளில் பயன்படுத்தும் பருப்பு, காய்ந்த மிளகாய் உள்ளிட்ட அத்தியாவசிய மளிகை பொருளின் விலையை தற்போது உயர்த்தியுள்ளார்கள்.
பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் அன்றாடம் பயன்படுத்தும் மளிகை பொருளின் விலையும் உயரும் என்று நாம் அறிந்த ஒன்றை ஆகும். வழக்கம் போல் வியாபாரிகள் பெட்ரோல், டீசல் விலை உயர்வை காரணம் காட்டி, தற்போது மளிகை பொருளின் விலையை உயர்த்தியுள்ளார்கள். அன்றாட குடும்பங்களில் சமையலுக்கு மிகவும் பயன்படுத்தப்படும் இத்தகைய பருப்பு, மிளகாய் போன்ற மளிகை சாமான்களின் விலையை உயர்த்துவதால் ஏழை எளிய நடுத்தர மக்கள் கட்டாயம் பாதிக்கப்படுவார்கள்.
இந்நிலையில் வட மாநிலங்களில் இருந்து வரவேண்டிய பொருட்களின் வரத்து குறைவாக இருப்பதன் காரணத்தைக் காட்டி, பல்வேறு வியாபாரிகள் பருப்பு, காய்ந்த மிளகாய், மல்லி உள்ளிட்ட பல்வேறு மல்லிகை பொருட்கள் மற்றும் பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ போன்றவற்றின் விலையை எக்கு தப்பி உயர்த்தியுள்ளார்கள். சென்னையில் விநாயகர் சதுர்த்தி காரணம் காட்டி வியாபாரிகள் வெல்லம், சக்கரை, கடலைப்பருப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை உயர்த்தி உள்ளதாக சில்லறை வியாபாரிகளும் மொத்த வியாபாரிகளும் கூறுகிறார்கள். வடமாநிலங்களில் மொத்த வியாபாரிகளும் பல்வேறு பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பதாகவும் வியாபாரிகள் குற்றம்சாட்டி உள்ளார்கள்.
Input & Image courtesy: Polimer News