Kathir News
Begin typing your search above and press return to search.

ஆம்னி பஸ் இயக்கி பங்குதாரர்களை ஏமாற்றிய 'ஹமத் டிரான்ஸ்போர்ட்' உரிமையாளர் முஸ்தபா அய்யம்பேட்டையில் கைது

வாக்குறுதி கொடுத்தபடி மாதாந்திர பங்கு தொகையை வழங்காமல் 417 முதலீட்டாளர்களை 8 கோடி அளவுக்கு ஏமாற்றுவதாக பிரபல தனியார் பேருந்து நிறுவனத்தின் உரிமையாளர் தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆம்னி பஸ் இயக்கி பங்குதாரர்களை ஏமாற்றிய ஹமத் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் முஸ்தபா அய்யம்பேட்டையில் கைது
X

Mohan RajBy : Mohan Raj

  |  17 May 2022 6:15 PM IST

வாக்குறுதி கொடுத்தபடி மாதாந்திர பங்கு தொகையை வழங்காமல் 417 முதலீட்டாளர்களை 8 கோடி அளவுக்கு ஏமாற்றுவதாக பிரபல தனியார் பேருந்து நிறுவனத்தின் உரிமையாளர் தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹமத் ட்ரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் 8 லட்சம் முதலீடு செய்திருந்த ராஜகிரிய சேர்ந்த பைரஜ்நிஷா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அதன் உரிமையாளர் முஸ்தபா என்பவரை கைது செய்தனர்.


தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை சேர்ந்த முஹம்மது ஹனிபா என்பவரது மகன் முஸ்தபா இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு 200 கோடி முதலீடு செய்து ஹமத் டிரான்ஸ்போர்ட் என்ற தனியார் நிறுவனம் தொடங்கி இருபது பேருந்துகள் இயக்கி வந்தார்.

இதில் அய்யம்பேட்டை, ராஜகிரி, பண்டாரவாடை மற்றும் சுற்றுப்பகுதிகளில் சேர்ந்த 700 நபர்கள் முதலீடு செய்திருந்தனர். பேருந்துகளை இயக்குவதற்கான மொத்த லாபத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை மாதந்தோறும் பங்குதாரர்களுக்கு கொடுப்பதாக முதலீட்டாளர்களுக்கு உத்தரவாதம் அளித்து அதன் அடிப்படையில் அவர்கள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிலையில் கொரோனா நோய் தொற்று காரணமாக 2020-21 ஆகிய இரண்டு ஆண்டுகள் லாக் டவுன் காரணமாக பேருந்துகள் இயக்கப்படாததால் ஹமத் ட்ரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்கு வருமானம் பாதிப்பு ஏற்பட்டது இதனால் பங்குதாரர்களுக்கும் பங்கு தொகையை கொடுக்க இயலவில்லை.

இந்நிலையில் பங்குதாரர்கள் தங்கள் முதலீட்டை திரும்ப கேட்டு அதிபர் முஸ்தபாவுக்கு நெருக்கடி கொடுத்து வந்த நிலையில் அவர் துபாய்க்கு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பி அவர் மே 17ஆம் தேதி இரவு தனது குடும்பத்தாருடன் காரில் சுற்றுலா செல்ல முயன்றபோது அது பற்றி தகவல் கிடைத்து அதே பகுதியை சேர்ந்த பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் அவரை சுற்றிவளைத்து அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அவரை கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹமத் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் முஸ்தபாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Source - The Indian Express

Next Story
கதிர் தொகுப்பு
Trending News