டிசம்பர் 4 முதல் மீண்டும் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
டிசம்பர் 4 முதல் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்த நிலையில், டிசம்பர் 5ம் தேதி நீலகிரி, கோவை, சேலம், தருமபுரி, ஈரோடு, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
By : Thangavelu

மேலும், மத்திய வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவ உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், 04.12.2021 அன்று மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் மேற்கு தொடர்ச்சி மலையை அருகாமையில் உள்ள மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதற்கு அடுத்த நாளான 05.12.2021 நீலகிரி, கோவை, சேலம், தருமபுரி, ஈரோடு, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மேலும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யவும் வாய்ப்பு இருக்கிறது. அதற்கு அடுத்த நாளான 06.12.2021 நீலகிரி, கோவை, நாமக்கல், தேனி, திருப்பூர், திண்டுக்கள் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: Puthiyathalamurai