Kathir News
Begin typing your search above and press return to search.

கிருஷ்ணகிரியில் 7 ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - தலைமை ஆசிரியர் லாரன்ஸ்க்கு பொது மக்கள் தர்ம அடி

கிருஷ்ணகிரியில் 7 ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - தலைமை ஆசிரியர் லாரன்ஸ்க்கு பொது மக்கள் தர்ம அடி

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 May 2022 5:16 AM GMT

ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கிறிஸ்தவ தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார் . காரில் தப்பிச் செல்ல முயன்ற அவரை அப்பகுதி மக்கள் பிடித்தனர். ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அவரை போலீசில் ஒப்படைப்பதற்கு முன்பு சரமாரியாக தாக்கினர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மலைக் குக்கிராமத்தில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் லாரன்ஸ் (48) தலைமை ஆசிரியராகப் பணிபுரிகிறார். அங்கு 102 மாணவர்கள் பயின்று வருகின்றனர். அவர்களில் 49 பேர் பெண்கள். கடந்த ஏப்ரல் 29ம் தேதி கிருஷ்ணகிரியில் நடந்த கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள பள்ளியில் பணிபுரியும் 3 ஆசிரியர்கள் சென்றனர்.பள்ளியில் லாரன்ஸ் மட்டும் இருந்தார்.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு அலமாரியில் இருந்த நோட்டுப் புத்தகங்களை எடுக்க உதவுமாறு கூறி ஏழாம் வகுப்பு மாணவியை அலுவலகத்துக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதால், உறவினர்கள் சேர்ந்து லாரன்சை தாக்கியுள்ளனர். அவர் காரில் தப்ப முயன்றபோது ஆத்திரமடைந்த மக்கள் கண்ணாடிகளை உடைத்தனர்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளியில் விசாரணை நடத்தி, லாரன்ஸை பணி இடைநீக்கம் செய்தனர்.

Inputs From: hindupost

Next Story
கதிர் தொகுப்பு
Trending News