Kathir News
Begin typing your search above and press return to search.

'கால்பந்து வீராங்கனை மரணத்தால் இதயம் நொறுங்கி போனது' - திரைத்துறையில் இருந்து முதலில் ஆதங்கம் தெரிவித்த ஜி.வி.பிரகாஷ்குமார்

'கால்பந்து வீராங்கனை பிரியாவின் மரணத்தால் இதயம் நொறுங்கிப் போனேன்' என ஆதங்கத்தோடு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

கால்பந்து வீராங்கனை மரணத்தால் இதயம் நொறுங்கி போனது - திரைத்துறையில் இருந்து முதலில் ஆதங்கம் தெரிவித்த ஜி.வி.பிரகாஷ்குமார்
X

Mohan RajBy : Mohan Raj

  |  16 Nov 2022 9:09 AM IST

'கால்பந்து வீராங்கனை பிரியாவின் மரணத்தால் இதயம் நொறுங்கிப் போனேன்' என ஆதங்கத்தோடு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் முதலில் காலையில் எழுந்து பின்பு உயிர் இழக்கும் கொடூர நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் இது குறித்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்து வருகின்றன ஆனால் திரைதுறையினர் இது குறித்து யாரும் அவ்வளவாக பேசவில்லை. இந்தநிலையில் திரைத்துறையில் இது குறித்து முதல் குரலாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தன்னுடைய டிவீட்டர் பதிவு தன்னுடைய ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார்.

'என் கேம் என்னை விட்டு போகாது காம்பேக் கொடுப்பேன்' என்ற தங்கை பிரியாவின் கடைசி நம்பிக்கை வார்த்தை சொன்ன தங்கையின் உயிர் இழப்பால் இதயம் நெருங்கிப் போனேன். இளம் வீரர்கள் இந்தியாவின் விலைமதிப்பற்ற சொத்து அவர்களை நாம் காப்பது அனைவரின் கடமை என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இணையங்களில் வைரலாகி வருகிறது.


Source - Asianet News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News