கனமழை எந்த மாவட்டங்களில் பெய்யும்.. இதோ வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை.!
கனமழை எந்த மாவட்டங்களில் பெய்யும்.. இதோ வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை.!
By : Kathir Webdesk
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருவதை காண முடிகிறது.
இந்நிலையில், புதுக்கோட்டை, நாகை, சிவகங்கை, நெல்லை, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை தொடர வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது.
தென் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை பெய்யும். மேலும், சென்னை நகர், புறநகர் பகுதிகளில் 2 நாட்களுக்கு லேசான மழையே பெய்யும். குமரிக்கடல், மாலத்தீவு, லட்சத்தீவு, அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.