கொடைக்கானலில் கனமழை.. சாலைகளில் திடீர் மண்சரிவு.. மலைவாழ் மக்கள் அச்சம்.!
கொடைக்கானலில் கனமழை.. சாலைகளில் திடீர் மண்சரிவு.. மலைவாழ் மக்கள் அச்சம்.!

தமிழகம் முழுவதும் புயல் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பலஇடங்களில் வெள்ள நீராக காடசி அளிக்கிறது. அதே போன்று கடலூர் மாவட்டத்தில் கனமழையால் பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
அதே போன்று திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் மரங்களும் ஆங்காங்கே விழுந்து வருகின்றது.
இந்நிலையில், கடந்த வாரம் திண்டுக்கல், பழனி சாலையில் மேல் பள்ளம் அருகே உள்ள ஏலக்காய் வளைவு என்ற பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. இந்நிலையில், மீண்டும் அதே பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
அதேபோன்று நேற்று முதல் கனமழை தற்போது வரை கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராத நிலை ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு காரணமாக மலை பகுதி மக்கள் தற்போது அச்சத்தில் உள்ளனர்.