கனமழையால் தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வரும் நிலையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மேலும் 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
By : Thangavelu

இதனிடையே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கும் நாளை (நவம்பர் 19) ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று கனமழை பெய்யும் என்பதால் 23 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, வேலூர், திண்டுக்கல், தேனி, திருவாரூர், கள்ளக்குறிச்சி, நாகை, மயிலாடுதுறை, விழுப்புரம், அரியலூர், தஞ்சை, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதே போன்று நெல்லை, செங்கல்பட்டு, தூத்துக்குடி, கடலூர், சேலம், திருவண்ணாமலை, திருச்சி ஆகிய 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பெரம்பலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொறுத்தவரையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடக்கப்பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Source: Daily Thanthi
Image Courtesy:Scroll.in