தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு கனமழை.. வானிலை மையம் தகவல்.!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு கனமழை.. வானிலை மையம் தகவல்.!
By : Kathir Webdesk
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
நாளை முதல் வருகின்ற 7ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.