Kathir News
Begin typing your search above and press return to search.

ஊரடங்கு தளர்வுகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை தேவை.. உயர்நீதிமன்றம்.!

கொரோனா ஊரடங்கு தளர்வுகளை பொதுமக்கள் தவறாக பயன்படுத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஊரடங்கு தளர்வுகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை தேவை.. உயர்நீதிமன்றம்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  9 Jun 2021 12:55 PM IST

கொரோனா ஊரடங்கு தளர்வுகளை பொதுமக்கள் தவறாக பயன்படுத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பொதுமுடக்க நேரங்களில் தெரு விலங்குகள் உணவு இன்றி இருப்பதாக விலங்குகள் நல ஆர்வலர் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் அளித்துள்ள தகவலின்படி, விலங்குகளுக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு என்று தனியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என கூறியது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் 3 வாரங்களுக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.

இதனையடுத்து பேசிய தலைமை நீதிபதி, தளர்வுகளை பொதுமக்கள் தவறாக பயன்படுத்துகின்றனர். தற்போது பொதுமுடக்கம் அமலில் உள்ளபோதும் பலரும் வெளியே சுற்றிக் கொண்டிருக்கின்றனர். முறையாக காரணம் இன்றி வெளியில் சுற்றும் நபர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியுள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News