வன்னியர்கள் 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழக்கு ஒத்திவைப்பு.!
தமிழக அரசு பணிகளில் வன்னியர் சமுதாயத்திற்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு சமீபத்தில் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் பன்வாரிலால் ஒப்புதல் அளித்துவிட்டார்.
By : Thangavelu
தமிழக அரசு பணிகளில் வன்னியர் சமுதாயத்திற்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு சமீபத்தில் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் பன்வாரிலால் ஒப்புதல் அளித்துவிட்டார். இந்த மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி திமுகவை சேர்ந்தவர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கியதன் மூலம் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள 22 பிரிவினருக்கு வெறும் 2.5 சதவீதம் இடஒதுக்கீடு மட்டுமே கிடைக்கும் எனக் கூறியிருந்தனர்.
மேலும், சாதிவாரி கணக்கீடு தொடர்பான முடிவுகள் வெளிவரும் வரை வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மற்றொரு நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.