நெல் மூடைகளை பாதுகாக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன? உயர் நீதிமன்றம் கேள்வி?
வெயில் மற்றும் மழையில் இருந்து நெல் மூடைகளை பாதுகாக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்று நீதிமன்றம் கேள்வி.
By : Bharathi Latha
மழை மற்றும் வெயில்களில் இருந்து விவசாயிகள் கஷ்டப்பட்டு உற்பத்தி செய்யும் நெல் மூட்டைகள் பாதுகாக்கப்படாத ஒரு நிலையில் தான் தற்போது வரை இருந்து வருவதாகவும் இவற்றை பாதுகாக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது? என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி எழுப்பி இருக்கிறது. மதுரை மாவட்டம் சேர்ந்த வக்கீல் ஸ்டாலின் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஒரு பொதுநல மனுவில் கூறியிருப்பது, இந்த ஆண்டு நன்றாக நெல் விளைந்து இருக்கிறது. மேலூர் பகுதிகளின் நெல் பயிர் தற்பொழுது அறுவடைக்காக தயார் நிலையில் இருக்கிறது.
நெல்மணிகளை அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. நெல் முடைகளை பாதுகாக்கப்படும் அரசு நெல் கிடங்குகள், பாதுகாப்பு மையங்கள் எங்கள் பகுதிகளில் அது போன்ற வசதிகள் இல்லை, விவசாயிகள் கஷ்டப்பட்டு உழைத்து விளைவிக்கும் நெல் தற்போது வெயில் மற்றும் மழையில் நனைந்து வீணாகி விடுகிறது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. எனவே மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் நெல் கிடங்குடன் கூடிய பாதுகாப்பு மையம் அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் மனு அளித்தேன். எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவருடைய மனதில் கூறுகிறார்.
இந்த மனு விசாரணைக்கு வர நீதிபதிகள் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள் நெல் மூட்டைகள் பல்வேறு மாவட்டங்களில் மழையில் நினைந்து வீணாவதாக செய்திகள் வெளியாகின்றது. அந்த இடங்களில் எல்லாம் தற்போது என்ன நிலைமை? என கேள்வி எழுப்பினர். இது குறித்த அரசு தரப்பு உடனடி சாரணையை தொடங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த வழக்கு விசாரணை ஒத்தி வைத்தார்.
Input & Image courtesy: Dinamalar