சிலை கடத்தல் மன்னனின் கோரிக்கையை நிராகரித்த உயர்நீதிமன்றம் - என்ன தெரியுமா அது?
சுவாமி சிலைகளை சட்டப்பிரதமாக கடத்தும் சிலை கடத்தல் மன்னனின் கோரிக்கை நிராகரித்த உயர்நீதிமன்றம்.
By : Bharathi Latha
சிலை கடத்தல் வழக்குகள் விசாரணை இனி தாமதப்படுத்த இயலாது என்றும், சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூர் கோரிக்கையை நிராகரித்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் பழமையான கோவில்களில் உள்ள ஏராளமான சிலைகளை திருடி வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சுபாஷ் சந்திர கபூர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அந்த வகையில் கும்பகோணத்தில் சிலை கடத்தியது தொடர்பான வழக்கு அங்குள்ள நீதிமன்றத்தில் நிலைமையில் உள்ளது.
இந்த வழக்கில் சாட்சியங்களை மீண்டும் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சிலை கடத்துதலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளேன் கும்பகோணம் மாவட்டம் நீதிமன்றத்தில் நடைபெறும். இந்த வழக்கில் சாட்சிகள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே விசாரித்த சாட்சிகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும் கும்பகோணம் நீதிமன்றம தள்ளுபடி செய்த வழக்கை மீண்டும் மறு உத்தரவு செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில் உரிய ஆதாரங்கள் தாக்கல் செய்து உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் இந்த நீதிபதி சத்திய குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மனுதாரர் தரப்பு காலா அவகாசம் கூறப்பட்டது பின்னர் ஆஜுரான அரசு வக்கீல் கீழ் கோர்ட்டில் நிலுவையில் உள்ள மனுதாரர் மீதான வழக்கில் கடந்த ஐந்து வருடங்களாக சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் இனி தாமதங்களை கடைபிடிக்க வேண்டாம் என்றும் கூறப்பட்ட சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின்படி மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று கூறி தீர்ப்பு அளித்தார்.
Input & Image courtesy: Thanthi News