துணைச் செயலாளர் இப்படியெல்லாம் பேசுவாரா? தமிழக அரசுக்கு கோர்ட் கொடுத்த உத்தரவு?
துணை செயலாளரை உடனடியாக பணியினை நீக்கம் செய்ய வேண்டும் என தமிழக அரசிற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
By : Bharathi Latha
சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 23ஆம் தேதி தமிழ்நாடு அரசுக்கு எதிரான கோர்ட் அவமதிப்பு வழக்கு ஒன்று விசாரணைக்கும் வந்தது. இந்த வழக்கை நீதிபதி ரமேஷ் முன்னிலையில் அமர்விற்கு வந்தது அப்பொழுது தமிழ்நாடு சட்டத்துறை துணை செயலாளர் நாகராஜன் ஆஜராகி இருந்தார். குறிப்பாக கோர்ட் வழக்கிற்கு வரும் பொழுது மதியம் 12 மணி வந்ததால் சிறிது இடைவேளையின் போது நீதிபதி தன்னுடைய அறைக்கு சென்று இருந்தார்.
அப்பொழுது துணை செயலாளர் நாகராஜன் சத்தமாகவும் பொது இடத்தில் அசிங்கமாகவும் பேசியதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதை அடுத்து அவரை உடனடியாக பணிவிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டு இருக்கிறார். இந்த ஒரு உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்த இருக்கிறது. குறிப்பாக கடந்த 23ஆம் தேதி மதியம் 12 மணி அளவில் சிறிய இடைவேளையின் போது துணை செயலாளர் நாகராஜன் கோர்ட்டுவளாகத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் முன்னிலையில் சத்தமாகவும், அவதூறாகவும் பேசியதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த சம்பவம் கோர்ட் அருகில் இருக்கின்ற கேமராவில் பதிவாகி இருக்கிறது. மேலும் இதனை நேரில் பார்த்த பல்வேறு தரப்பினரும் அவர் நடந்து கொண்ட விதத்தை கண்டித்து இருந்தார்கள். எனவே கோர்ட் இந்த ஒரு விஷயத்தில் தலையிட்டு அவருக்கு தற்பொழுது தீர்ப்பு வழங்கியிருக்கிறது. மேலும் இந்த வழக்கில் சட்டத்துறை முதன்மை செயலாளர் துணை செயலாளரான நாகராஜனை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து அவர் மீது சட்டப்படி அன்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோர்ட் தற்போது தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
Input & Image courtesy: News