Kathir News
Begin typing your search above and press return to search.

சுவாமி சிலைகளை பாதுக்காக்கும் பணத்தில் குளறுபடி - அறநிலைத்துறை செயலாளர் நேரில் ஆஜராக அதிரடி உத்தரவு!

சுவாமி சிலைகளை பாதுகாக்கும் அறைகள் கட்டு விவகாரத்தை அறநிலையத்துறை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவு.

சுவாமி சிலைகளை பாதுக்காக்கும் பணத்தில் குளறுபடி - அறநிலைத்துறை செயலாளர் நேரில் ஆஜராக அதிரடி உத்தரவு!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  13 Nov 2022 6:05 AM GMT

சுவாமி சந்தைகளை பாதுகாக்கும் கோவில்களில் ஸ்ட்ராங் ரூம் கட்டுவதற்கான பணத்தில் நடந்த குளறுபடி காரணமாக அறநிலையத்துறை செயலாளர் நேரில் ஆஜர் ஆகி வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள பழமையான கோவில்களில் உள்ள சுவாமி சிலைகளை பாதுகாப்பது தொடர்பாக சென்னை ஹைகோர்ட் தாமதமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசனும் ஆகியோர் பாதுகாக்க கோவில்களில் ஸ்ட்ராங் ரூம்கள் கட்ட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.


அறங்காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும் ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் சொத்துக்களை மீட்க வேண்டும் வாடகைகளை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட 75 உத்தரவுகளை பிறப்பித்தது. இலையில் கோவில்கள் தொடர்பான வழக்குகளை நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோர்ட்டின் உத்தரவின்படி எத்தனை கோவில்களில் ஸ்ட்ராங் ரூம்கள் கட்டப்பட்டுள்ளன? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஒரே ஒரு கோவில்களில் தான் அந்த கட்டப்பட்டு இருப்பது என்ற அரசு தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.


எனவே இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், கோவிலில் ஸ்ட்ராங் ரூம் கட்ட கடந்த 2018 ஆம் ஆண்டு 38 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஒரே ஒரு அறை மட்டும் தான் கட்டப்பட்டிருக்கிறது. கோவில்களில் உள்ள ஒவ்வொரு சிலையும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ளது. எனவே இந்த உத்தரவை அமல்படுத்தாததற்கு தாமாக முன்வந்து கோர்ட் அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அறநிலையத்துறை செயலாளர் நீரில் ஆஜராகும் படி உத்தரவிட்டு நீதிபதிகள் எச்சரித்து இருந்தார்கள்.

Input & Image courtesy: Thanthi News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News