கோவில் கணக்குகளை சரிபார்க்க மத்திய தணிக்கை குழு.. கதறும் இந்து சமய அறநிலையத்துறை!
தமிழகத்தில் உள்ள கோவில்களில் வரவு செலவு கணக்குகளை சரிபார்க்க மத்திய தணிக்கை குழு.
By : Bharathi Latha
அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் கோவில்களின் வருவாய், செலவுகளை மத்திய கணக்கு தணிக்கை குழு தணிக்கை செய்வதால் மாநில அரசின் உரிமை பறிக்கப்படாது. எனவே தமிழகத்தில் உள்ள கோவில்களின் வரவு செலவு திட்டத்தை கண்காணிக்க மாநில தணிக்கை குழு மட்டுமல்லாது மத்திய தணிக்கை குழுக்கும் அதிகாரம் அளிக்கப்படும் என்று நீதிமன்றம் உத்தரவு வழங்கியிருக்கிறது. கோவில் பாதுகாப்பு தொடர்பாக பிறப்பித்த உத்தரவுகளை மறு ஆய்வு செய்ய கோரி அறநிலையத்துறை தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக இந்த ஒரு உத்தரவுகளை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
நீதி அரசர்கள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் வரலாற்று சிறப்புமிக்க 75 வழிகாட்டு நெறிமுறைகளை அளித்துள்ளார்கள். இதில் தமிழக அரசு 32 நெறிமுறைகளை மாற்றித் தருமாறு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதனை நிராகரித்த நீதிபதிகள் தமிழக அரசை கோவில் விஷயங்களில் சரியாக நடக்க வலியுறுத்தியுள்ளது. கடைசியில் 7 உத்தரவுகளாவது மாற்றித் தருமாறு தமிழக அரசு கதறி உள்ளது.
அதில் கோவில் வரவு செலவுகளை தணிக்கை செய்ய மாநில அரசுக்கு மட்டுமே அனுமதி தர வேண்டும் என்றும் மத்திய அரசின் தணிக்கை குழுவை ரத்து செய்ய தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.அதற்கு நீதி அரசர்கள் மத்திய அரசு தணிக்கை குழுவை ரத்து செய்ய முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளது. மேலும் கோவில் நலனுக்காக பல நல்ல உத்தரவுகளை நீதிமன்றம் அளித்துள்ளது. இந்த உத்தரவிற்கு பல்வேறு இந்து அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள் மேலும் இவற்றை உடனடியாக நிறைவேற்ற உத்தரவிட வேண்டும் என்றும் இந்து முன்னணி வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: News