Kathir News
Begin typing your search above and press return to search.

கோவையில் பரபரப்பு : தொடர்ந்து வெடிகுண்டு தாக்குதலுக்குள்ளாகும் இந்து மகாசபா மாநில இளைஞர் அணி செயலாளரின் கார் !

கோவையில் பரபரப்பு  : தொடர்ந்து வெடிகுண்டு தாக்குதலுக்குள்ளாகும் இந்து மகாசபா மாநில இளைஞர் அணி செயலாளரின் கார்   !
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 Nov 2021 5:01 AM

கோவையில் இந்து மகாசபா மாநில இளைஞர் அணி செயலாளர் மீது சமீபகாலமாக பெட்ரோல் குண்டு வீசப்படுவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்து மகாசபாவில் மாநில இளைஞர் அணி செயலாளராக இருப்பவர் நாற்பத்தைந்து வயதுடைய சுபாஷ். இவர் கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடையில் வசிப்பவர். சமீப காலமாக இவர்மீது மர்ம நபர்கள் தாக்குதலை நடத்தி வருகின்றனர், சுபாஷ் அவரது காரை ஒட்டி செல்லும் பொழுது வெடி குண்டை வீசுவது, அவர் வளர்க்கும் வீட்டு நாய்க்கு வெஷம் வைத்து கொள்ளவது. போன்ற தாக்குதல்களை மர்ம நபர்கள் இவர் மீது அரேங்கேற்றிவருகின்றனர். அதே போல் இரவு 11 மணிவாக்கில் இவரது வீட்டில் நிறுத்திவைக்கப்பட்ட கார் மீது யாரோ ஒரு மர்ம நபர் பெட்ரோல் குண்டை எரிந்துவிட்டு சென்றுள்ளான். சம்பவம் அரங்கேறியபொழுது சுபாஷ் வீட்டில் இருந்துள்ளார். குண்டு வெடித்த சத்தம் கேட்டவுடன் வெளிய ஓடி வந்து, தீ பற்றி எறியும் தனது காரை கண்டு அதிர்ச்சியுற்றார்.

இந்த சம்பவத்தை சட்டப்படி எதிர்கொள்ள தடாகம் போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தார் . போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணையை தொடங்கினர். சுபாஷின் வீட்டில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தினர். அந்த காட்சிகளில் இரண்டு மர்ம நபர்கள் தலைக்கவசம் அணிந்து சுபாஷின் கார் மீது குண்டை வீசும் காட்சி இடம்பெற்றுள்ளது. அடையாளங்களை வைத்து அந்த மர்ம நபர்களை தேடும் பனி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சமீப காலமாக இந்து மத உணர்வாள்களுக்கு எதிராக வெடி குண்டு மற்றும் கொலை போன்ற தாக்குதல்கள் நடேந்தேறுவது வழக்கமாகிவருகிறது.

Maalaimalar


Next Story
கதிர் தொகுப்பு
Trending News