தீபாவளிக்கு வணிக நிறுவனங்கள் முன்பு அலங்கார விளக்குகள் பொருத்தினால் அபராதம் ! - மின்வாரிய அறிவிப்புக்கு இந்து வியாபாரிகள் சங்கம் கண்டனம்!
இந்துக்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக விளங்குவது தீபாவளி. இந்த திருநாளில் புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்தும் இறைவனை வணங்குவது வழக்கம். அதே போன்று இந்துக்களை வரவேற்கும் விதமாக கடைகள் முன்பாக அலங்கார விளக்குகள் பொருத்தி அவர்களுக்கு கடை உரிமையாளர்கள் வாழ்த்து சொல்வது வழக்கம்.
By : Thangavelu

இந்நிலையில், தீபாவளிப் பண்டிகையையொட்டி கடைகள், வணிக நிறுவனங்களில் முன்பு அலங்கார விளக்குகள் பொருத்தும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்ற அறிவிப்பு இந்து வியாபாரிகள் நலச்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.இந்த சங்கத்தின் மாநிலத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பண்டிகை காலங்களில் கடைகளை வண்ண அலங்கார விளக்குகளால் அலங்கரிப்பது வழக்கம். கொரோனா தொற்றால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வியாபாரிகள் தற்போது வணிகத்தை மீட்டு வருகின்றனர். பண்டிகைக் காலத்தில் கடைகளை அலங்கரித்து வியாபாரத்தை மேம்படுத்த விரும்புவர்.
இந்நிலையில், மின்விளக்குகளால் அலங்கரிக்கும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என மின்வாரியம் அறிவித்திருப்பது வியாபாரிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். ஆகவே, வியாபாரிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மின்வாரியம் இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
Source: Dinamani
Image Courtesy:Samayam