இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: போலீசார் தீவிர விசாரணை!
கும்பகோணத்தில் இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள்.
By : Bharathi Latha
தமிழகத்தில் தீவிரவாதம் தி.முக ஆட்சியில் தலை தூக்க ஆரம்பித்து இருக்கிறது. குறிப்பாக தீபாவளி பண்டிகைக்கு முன் தினம் கோவை மாவட்டத்தில் காரில் குண்டுவெடிப்பு சம்பவம் தீவிரவாதிகளின் தாக்குதல் தான் என்று NIA வெளிப்படுத்தி இருக்கிறது. ஏனெனில் பல்வேறு அமைப்புகளுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டது. குறிப்பாக பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா என்று அழைக்கப்படும் அமைப்பிற்கு தடை விதிக்கப்பட்டதால்தமிழகத்தில் பல்வேறு தலைவர்களின் வீடுகளில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் அரங்கேறியது. பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது. இந்நிலையில் தற்பொழுது கும்பகோணம் இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் தற்பொழுது பெட்ரோல் குண்டு வீச பட்டுள்ளது.
கும்பகோணம் மாவட்டம் மேல காவிரி பகுதியில் சேர்ந்தவர் தான் சங்கரபாணி இவர்தான். இந்து முன்னணி நிர்வாகி ஆவார். இவர் 2017 ஆம் ஆண்டு முதல் இந்து முன்னணியின் கும்பகோணம் மாநகர செயலாளர் பதவி வகிக்கிறார். இந்நிலையில் தன்னுடைய மகள்,மகன் மற்றும் மனைவியுடன் வீட்டில் தூங்கி இருந்த பொழுது, இவர் வீட்டில் முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி இருக்கிறார்கள். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதி பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
அப்போது வீட்டுவாசலில் வெடி சத்தம் கேட்டுள்ளது. குறிப்பாக விடியக்காலை சங்கரபாணி எழுந்து பார்க்க சென்றார். வீட்டு வாசலில் பெட்ரோல் பாட்டில் கரையுடன் கூடிய நிலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது கண்டறியப்பட்டது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார் போலீஸ்சாருக்கு பின்னர் தகவல் கொடுக்கப்பட்டது. பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதை எடுத்து கும்பகோணம் இந்து முன்னணி பொறுப்பாளர் வேதா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அவர் வீட்டின் முன்பு விசாரணைக்கு திரண்டனர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்ட சோதனை நடத்தப்பட்டது. தற்போது விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Input & Image courtesy: Dinamalar News