கோவில் வழிகாட்டி பலகையில் உதயநிதி போஸ்டர் ஒட்டி அழகு பார்த்த தி.மு.க'வினர் - மக்கள் எதிர்ப்பால் கிழித்தனர்!
கோவில் வழி காட்டு பலகையில் திமுகவினர் ஒட்டிய போஸ்டரால் இந்து முன்னணி எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது.
By : Bharathi Latha
கன்னியாகுமரி மாவட்டம் வாள்வச்ச கோஷ்டம் மகிஷாசுரமர்த்தினி பகவதி அம்மன் கோவிலுக்கு உட்பட்ட வழிகாட்டி பலகை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டு பலகை மூலமாக பல்வேறு தரப்பு மக்கள் குறிப்பாக வெளிநாட்டிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் சரியான பாதைகளை கண்டறிந்து கோவிலுக்கு சென்று வருகிறார்கள். மேலும் ஊருக்கு புதிதாக வரும் நபர்கள் கூட அறிவிப்பு பலகை மூலமாக வழியை அறிந்து கொள்வார்கள்.
இந்நிலையில் இந்த அறிவிப்பு பலகையின் மேல் தி.மு.கவினர் போஸ்டர் ஒட்டி அராஜகம். இதனை உடனடியாக தடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பினர் அங்கு தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்து இருக்கிறார்கள். குறிப்பாக அந்த ஊர் பொதுமக்களும் இந்த ஒரு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். கோவில் செல்லும் அறிவிப்பு பலகையின் மேல் எதற்கு கட்சி சம்பந்தப்பட்ட போஸ்டர்களை ஒட்ட வேண்டும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
இது சம்பந்தப்பட்ட காவல்துறை நிச்சயம் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எந்த ஒரு போஸ்டர்களும் ஒட்டக்கூடாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அதையும் மீறி தற்பொழுது கட்சி சார்ந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: Twitter