Kathir News
Begin typing your search above and press return to search.

தருமபுரி: இறைவன் கருவறையில் கை வைப்பதா! தி.மு.க. அரசுக்கு எதிராக இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

கோயில் நகைகளை உருக்கும் திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று (அக்டோபர் 26) இந்து முன்னணி அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது.

தருமபுரி: இறைவன் கருவறையில் கை வைப்பதா! தி.மு.க. அரசுக்கு எதிராக இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!
X

ThangaveluBy : Thangavelu

  |  26 Oct 2021 12:04 PM GMT

கோயில் நகைகளை உருக்கும் திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று (அக்டோபர் 26) இந்து முன்னணி அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது. அந்த வகையில் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தொகுதிகுட்பட்ட மாரண்டஅள்ளியில் இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்து ஆட்டோ முன்னணி தலைவர் வடிவேல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் திமுகவுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியதாவது:


உருக்காதே உருக்காதே இறைவனுக்கு வழங்கப்பட்ட நகைகளை உருக்காதே. இறைவன் கருவறையில் திமுக கைவைக்கலாமா என்ற கண்டனங்களை முன்வைத்து கோஷங்களை எழுப்பினர். இதில் ஏராளமானோர்கள் கலந்து கொண்டு தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் மாரண்டஅள்ளி ஒன்றிய தலைவர் கிருஷ்ணன், நகர தலைவர் சரவணன், ஒன்றிய துணைத்தலைவர் சுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதே போன்று பாப்பாரப்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் பாடி முரளி, இமானுவேல், கல்வியாளர் பிரிவு மாவட்ட செயலாளர், இந்து முன்னணி நிர்வாகி முனுசாமி, ஒன்றிய பொது செயலாளர் பிரபு, ஒன்றிய துணைத் தலைவர் சிவசக்தி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு திமுகவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை எழுப்பினர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News