கோடி தீர்த்தம் ஆன்லைன் விற்பனையை தடுத்து நிறுத்திய இந்து முன்னணி!
By : Thangavelu
கோடி தீர்த்தம் ஆன்லைனின் விற்பனை செய்வதை இந்து முன்னணி புகாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வளாகத்தில் மட்டும் விற்ககூடிய கோடி தீர்த்தம் மற்றும் பிராசதத்தை கடந்த சில நாட்களாக தனியார் நிறுவனம் ஆன்லைனில் ரூ.499க்கு பக்தர்களை ஏமாற்றி விற்று வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்து முன்னணி புகார் அளித்தது. இது போன்ற விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை தொடர்ந்து ஆன்லைன் விற்பனை தடுத்து நிறுத்தியதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
#கோடிதீர்த்தம் ஆன்லைனில் விற்ப்பனை.
— Hindu Munnani (@hindumunnaniorg) April 7, 2022
அருள்மிகு #இராமநாதசுவாமி திருக்கோயில் கோடி தீர்த்தப் பிரசாதம் ஆன்லைன் விற்பனை தளமான அமேசானில் எந்த விதமான அனுமதியும் பெறாமல் 499 ரூபாய்க்கு விற்பனை.இதனை கண்டித்து #இந்துமுன்னணி அளித்த புகாரின் பேரில் தடுத்து நிறுத்தம். #Amazon #இராமேஸ்வரம் pic.twitter.com/r0qMq4VaMI
இது தொடர்பாக இந்து முன்னணி ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில் கோடி தீர்த்தப் பிரசாதம் அமேசானில் எந்த விதமான அனுமதியும் பெறாமல் 499 ரூபாக்கு விற்பனை. இதனை கண்டித்து இந்து முன்னணி அளித்த புகாரின் தடுத்து நிறுத்தம். இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: Twiter