Kathir News
Begin typing your search above and press return to search.

நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் அறங்காவலர் குழுவை நியமித்த தி.மு.க: இந்து முன்னணி எச்சரிக்கை!

அறிவிப்பு கொடுக்காமலேயே நீதிமன்ற உத்தரவை மீறி ரகசியமாக அறங்காவலர் மற்றும் அறங்காவலர் குழு நியமிப்பா? அரசியல் சார்ந்த நபர்களை நியமிக்கத்தான் இந்த ரகசிய நடைமுறையா? நடைமுறையை கடைபிடிக்கா விட்டால் நீதி மன்றத்துக்கு பதில் சொல்ல வேண்டிவரும் என்று இந்து முன்னணி எச்சரிக்கை விடுத்துள்ளது.

நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் அறங்காவலர் குழுவை நியமித்த தி.மு.க: இந்து முன்னணி எச்சரிக்கை!

ThangaveluBy : Thangavelu

  |  10 Nov 2021 3:36 AM GMT

அறிவிப்பு கொடுக்காமலேயே நீதிமன்ற உத்தரவை மீறி ரகசியமாக அறங்காவலர் மற்றும் அறங்காவலர் குழு நியமிப்பா? அரசியல் சார்ந்த நபர்களை நியமிக்கத்தான் இந்த ரகசிய நடைமுறையா? நடைமுறையை கடைபிடிக்கா விட்டால் நீதி மன்றத்துக்கு பதில் சொல்ல வேண்டிவரும் என்று இந்து முன்னணி எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் உள்ள கோயில்களில் திமுக அரசு தன்னிச்சையாக அறங்காவலர் குழுவை நியமனம் செய்து வந்தது. இதற்கு இந்து முன்னணி மற்றும் பாஜக கடும் எதிர்ப்புகள் தெரிவித்தது. இதன் பின்னர் இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதன் பின்னர் அறங்காவலர் குழு நியமனத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.


இதனிடையே திமுக அரசு தன்னிச்சையாக பல்வேறு மாவட்டங்களில் அக்கட்சியை சேர்ந்தவர்களை மட்டும் அறங்காவலர்களாக நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இதனால் இந்து மதத்திற்கு எதிராக செயல்படுபவர்கள் திமுகவினர். எனவே கோயில்களில் பல்வேறு மாறுதல்களை திமுகவினர் செய்ய வாய்ப்புள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் திமுக, தி.க. கட்சிகள் இந்து விரோத நம்பிக்கையை கடைப்பிடித்து வருகின்றது. தற்போது அவர்களிடமே இந்து அறங்காவலர் குழுவை நியமனம் செய்தால் கோயில்களில் நடைபெற உள்ள தினசரி பூஜைகளை கூட தடை செய்து விடுவார்கள் என இந்துக்கள் அஞ்சி வருகின்றனர்.

இந்நிலையில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த இந்து முன்னணி பொதுசெயலாளர் ந.முருகேசன் இந்து சமய அறநிலையத்துறைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: மாவட்ட அறங்காவலர் குழு நியமனம் மாண்பை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் படி நடைமுறைபடுத்த ஆவணம் செய்வது தொடர்பாக, வணக்கம், நான் இந்து முன்னணி பேரியக்கத்தின் கரூர் மாவ்டம், பொதுசெயலாளராக உள்ளேன். இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் மாவட்ட அறங்காவலர் குழு மற்றும் பரம்பரை முறை வழிசாரா அறங்காவலர்கள் நியமனம் தொடர்பாக விண்ணப்பங்கள் தற்சமயம் தங்களால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2019ம் வருடம் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் காந்திமதி நாதர் என்பவர் தொடர்ந்த வழக்கில் அறங்காவலர் குழு நியமனம் தொடர்பாக உரிய அறிவிப்பு செய்தும் மேற்படி அறிவிப்பில் அறங்காவலர் குழு உறுப்பினர்களுக்கு தகுதிகளை வரையறை செய்து அறிவிப்பு செய்ய உத்தரவிடப்பட்டிருந்த தாங்கள் அறிந்ததே.


மேலும், 27.10.2021 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மேற்படி பொருள் சம்பந்தமாக டி.ஆர்.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த வழக்கின் விசாரணையின் போது மாவட்ட அறங்காவலர் குழு நியமனம் தொடர்பாக அறிவிப்புகள் குறைபாடுடன் இருப்பதாக சுட்டிக்காட்டியதன் அடிப்படையில் மாண்புமிகு தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி அடங்கிய அமர்வில் அரசின் தலைமை வழக்கறிஞர் குறைபாடுடன் வெளியிட்ட அறிவிப்புகளை திரும்பப் பெற்று மீண்டும் புதிய அறிவிப்புகளை வெளியிடுவதாக நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அரசியல் கட்சி பொறுப்பில் உள்ளவர்களை நியமனம் செய்ய கூடாது என்ற உத்தரவினை மீறி செயல்படுவதாக நாங்கள் அறிகின்றோம்.

மேற்படி சூழலில் கரூர் மாவட்டத்தை பொருத்தவரை தாங்களால் எந்த அறிவிப்பும் இதுநாள் வரை வெளியிடப்படவில்லை, மற்றும் தங்கள் அலுவலக தகவல் பலகையில் இந்த பொருள் தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. எனவே உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்களை நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்வது நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயலாகும். எனவே தாங்கம் மேற்படி உத்தரவுகளுக்கு இணங்க பாரபட்சம் இல்லாமல் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி பேரியக்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு அவரது கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: Hindu Munnani Twiter

Image Courtesy:Tamilnadu Tourism

Next Story
கதிர் தொகுப்பு
Trending News