கோவில் பிரசாதத்திற்கு பக்தர்களிடம் கட்டணம் வசூலிப்பதா? மதுரை ஐகோர்ட் கேள்வி?
இருபது ரூபாய் கொடுத்து பக்தர்களிடம் பிரசாரம் வழங்கும் கோவில் உயர்நீதிமன்றத்தின் கேள்வி?
By : Bharathi Latha
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் மதுரை நீதிமன்றத்தில் மனு ஒன்றே தாக்கல் செய்துள்ளார். அவருடைய மனுவில் கூறி இருப்பதாவது விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் செம்பக தோப்பு வனப்பகுதியில் கல்யாண சுந்தரவல்லி, சௌந்தரவல்லி பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் பிரசித்தி பெற்றதும் புரட்டாசி மாதத்தில் இங்கு நடைபெறும் விழாக்களின் போது ஏராளமான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். ஏராளமான பக்தர்கள் இங்கு சென்று வழிபாடுவர்.
இந்த கோவில் வனப்பகுதியில் இருப்பதால் தற்போது குறிப்பிட்ட எல்லையில் வனத்துறை ஊழியர்கள் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் தலா ரூபாய் 20 வசூலிக்கின்றனர். அதற்கு முன்பு வரை எந்தவித கட்டணமும் பக்தர்களிடம் வசூலித்தது இல்லை. இந்த ஒரு புதிய நடைமுறையாக உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் விதிமுறைகளை மீறி கட்டணம் வசூலிப்பது ஏற்புடைய தக்கதல்ல. எனவே ரூபாய் 20 வசூலிப்பதை நிறுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் பயனில்லை. எங்கள் மனு அடிப்படையில் செண்பகத் தோப்பு சுந்தர் ராஜ பெருமாள் கோவிலுக்கு தரும் பக்தர்களிடம் ரூ. 20 ரூபாய்க்கு வனதுறையினர் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
இந்த வழக்கை நீதிபதி மகாதேவன், சத்திய நாராயண பிரசாந்த் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அரசு தரப்பு வக்கீல் ஆஜராகி பக்தர்களிடம் வனப்பகுதியில் உள்ள குப்பைகளை சேகரிப்பதற்காக 20 ரூபாய் வசூலிக்கிறார்கள் என்று கூறியிருந்தார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி, வனப்பகுதியை சுத்தம் செய்வதற்கு அரசிடம் தான் நிதியை கேட்டு பெற வேண்டும். வனப்பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் தங்கள் பொறுப்புகளையும் கடமைகளையும் உணர்ந்து செய்யப்பட வேண்டும். கோவில் விழாக்களின் அன்னதானம் சாப்பிட வரும் ஏழை பத்தர்களிடமிருந்து ரூபாய் 20 வசூலிப்பது ஏற்க இயலாது என்று கூறியிருக்கிறார். ரூபாய் 20 இருந்தால் அம்மா உணவகத்தில் ஒரு நாள் சாப்பாட்டை முடித்து விடலாம். திடீரென்று வனத்துறையினர் கட்டணம் வசூலிப்பது எப்படி? என மனுதாரர் கேள்வி குறித்து விருதுநகர் மாவட்ட கலெக்டர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டார்.
Input & Image courtesy: Thanthi News