இடியும் நிலையில் உள்ள நொடி நைனார் கோவில்: கண்டு கொள்ளாத இந்து சமய அறநிலையத்துறை?
இடியும் நிலையில் உள்ள பழமையான தியாகராஜர் கோவிலை சரி செய்ய நடவடிக்கை எடுக்குமா இந்து சமய அறநிலைத்துறை?.
By : Bharathi Latha
திருவாரூர் உள்ள பழமையான நொடி நைனார் கோவிலை இந்து சமய அறநிலையத்துறை அடையாளம் கண்டு, அந்த கோவிலுக்கு சரியான பாதுகாப்பு கொடுத்து பூரண குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று பக்தர்கள் அதிக அளவில் எதிர்பார்க்கிறார்கள். திருவாரூர் சைவ சமயங்களில் தலைப்பிடமாக இந்த கோவில் திகழ்கிறது. குறிப்பாக சைவ மதங்களின் முக்கிய அங்கமாகவும் இந்த கோயில் விளங்குகிறது. பிறப்புக்கு முக்தி அளிக்கும் தளமாகவும் இந்த கோவில் பார்க்கப்படுகிறது. திருவாரூரில் உள்ள தியாகராஜர் பெருமாள் கோவில் பழமை பழம் பெரும் வாய்ந்த சிவாலயமாகும்.
இந்த சிறப்புமிக்க கோவிலை சுற்றி நான்கு எல்லைகளில் சிவன் கோயில்கள் அமைந்துள்ளது. அவற்றில் ஒன்று கீழே விழுந்து தெற்கு வீதி சந்திப்பு பகுதியில் நொடி நயனார் கோவில் உள்ளது. இந்த சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் தியாகராஜர் பெருமாள் கோவில் கட்டுப்பாட்டில் இந்த கோவில் வருகிறது. ஆனால் இந்த கோவில் சரியாக நிர்வாகிக்கப்படாத நிலையில் இருப்பதால் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவிலுக்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. பக்தர்களின் தொடர்பு முயற்சியினால் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு கோவிலுக்கு பாதை ஏற்படுத்தப்பட்டது. இருந்தபோதிலும் இப்போது இந்த கோவில் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது.
என்ன நேரத்திலும் இடிந்து விழும் என்று அபாயத்தில் உள்ள கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் தென்படவில்ல? என்பது போல் தெரிகிறது. அதிகாரிகள் யாரும் இந்த கோவிலை கண்டு கொள்ளவில்லை என்று பக்தர்கள் வேதனை கொள்கிறார்கள். இந்த கோவிலுக்கு என்று தனியாக அற்றவர் நியமிக்கப்படவில்லை. கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இந்த கோவில் குடமுழுக்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கோவில் கண்டு கொள்ளப்படாத ஒரு நிலையில் தான் தற்போது வரை இருந்து வருகிறது. இந்த கோவிலை அதிகாரிகள் மீட்டு முழுமையாக சீரமைத்து பக்தர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பக்தர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
Input & Image courtesy: Thanthi News