வரதராஜ பெருமாள் கோவிலை HR&CE கட்டுப்பாட்டில் கொண்டு வரக்கூடாது - இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!
விருதுநகரில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலை இந்து சமூக அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரக்கூடாது என்று ஆர்ப்பாட்டம்.
By : Bharathi Latha
விருதுநகர் மாவட்டம் ரெட்டியா பட்டியில் அமைந்துள்ளது தான் அருள்மிகு வரதராஜ பெருமாள் கோவில். இந்து கோவிலை தற்போது தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது இதன் காரணமாக இன்று நடப்பதற்கு எதிராக இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த நபர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டத்தில் நடத்தியுள்ளார். இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் 38,618 கோயில்கள், மடங்கள் மற்றும் அறக்கட்டளைகளும், 17 சமண சமயத் திருக்கோயில்களும் இருக்கின்றன. இத்தனை ஆயிரம் கோயில்களையும் நிர்வகிக்க மிகப் பெரிய கட்டமைப்பைத் தமிழக அரசு உருவாக்கி வைத்திருக்கிறது.
இந்தக் கட்டமைப்பின் ஒட்டுமொத்தத் தலைவர் ஆணையர். அவருக்குக் கீழே, கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், தணிக்கை அலுவலர், துணை இயக்குனர் என இந்தக் கட்டமைப்பு செயல்படுகிறது. இவை தவிர, கோயிலை நிர்வகிக்கும் அந்தந்த கோயில்களின் ஊழியர்கள் தனி. இந்து சமய அறநிலையத்துறை என்பது ஒரு குறிப்பிட்ட மதத்தின் திருக்கோயில்களை, திருமடங்களை, அறநிலையங்களை நிர்வகிக்கும் ஒரு துறை. இந்திய அரசியலமைப்பின் மதச்சார்பற்ற கோட்பாட்டின்படி இத்துறையின் செலவினங்களை அரசின் பொதுக் கருவூலத்திலிருந்து மேற்கொள்ள இயலாது.
இதனால், இந்து சமய அறநிலையத் துறையின் ஊழியர் சம்பளம் உள்ளிட்ட அனைத்துச் செலவீனங்களும், திருக்கோயில்களில் ஈட்டப்படும் வருவாயிலிருந்தே நிர்வகிக்கப்படுகிறது. அதாவது ஒரு கோயில் ஈட்டும் மொத்த வருவாயில், வரிக்கு உட்பட்ட வருமானத்தில் இருந்து 14 சதவிகிதம், அரசுக்கு வரியாகச் செலுத்தப்படுகிறது. பக்தர்கள் இந்த கோவிலும் நிர்வகித்து வசிக்கிறார்கள். எனவே இத்தகைய காரணங்களுக்காக, அருள்மிகு வரதராஜ பெருமாள் கோவிலை இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரக்கூடாது என கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி உள்ளது.
Input & Image courtesy: Twitter Source