உதகையில் என்ன நடக்கிறது ? ஒரே நாளில் பள்ளி மற்றும் பேருந்து நிலையத்தில் இந்துக்களை குறிவைத்து பைபிள் விநியோகம் !
By : Dhivakar
நீலகிரி : குன்னூர் பேருந்து நிலையத்தில் நிற்கும் இந்துக்களிடம் கிறிஸ்தவ மதமாற்ற கும்பல் பைபிள் விநியோகித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நீலகிரியில் உதகை ஜெல் மெமோரியல் பள்ளியில் நேற்று கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடுவது என காரணம் காட்டி தலைமை ஆசிரியர் உதவியுடன் இந்து மாணவிகளுக்கு பைபிள் வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கண்டித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் இந்துமுன்னணி புகார் மனு அளித்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் தயவுடனே இந்த பைபிள் விநியோகம் நடைபெற்றது இந்து உணர்வாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதே உதகையில் அதே தினத்தில் மேலும் ஒரு மத மாற்றம் முயற்சி நடந்தேறியுள்ளது.
நேற்று இரவு குன்னூர் பேருந்து நிலையத்தில், பேருந்துக்காக நின்று கொண்டிருக்கும் இந்துக்களிடம் கிறிஸ்தவ மதமாற்ற கும்பல், பைபிள் விநியோகித்ததாக மேலும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இச் செய்தி அறிந்த இந்து முன்னணி அமைப்பினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் பைபிள் விநியோகம் தடுத்து நிறுத்தப்பட்டது. அதை தொடர்ந்து காவல் நிலயத்திடம் புகாரும் அளிக்கப்பட்டது.
உதகையில் ஒரே நாளில் நடந்த இந்த இரு சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.