Kathir News
Begin typing your search above and press return to search.

மாணவியின் நெற்றியுலுள்ள திருநீற்றையும் குங்குமத்தையும் அழித்த அரசு உதவி பெறும் கிறிஸ்துவப் பள்ளி ! களத்தில் குதித்த பா.ஜ.க, இந்து முன்னணி !

மாணவியின் நெற்றியுலுள்ள  திருநீற்றையும் குங்குமத்தையும் அழித்த அரசு உதவி பெறும் கிறிஸ்துவப் பள்ளி ! களத்தில் குதித்த பா.ஜ.க, இந்து முன்னணி  !
X

DhivakarBy : Dhivakar

  |  6 Nov 2021 11:18 AM GMT

அரசு உதவி பெறும் கிறிஸ்தவப் பள்ளியில், நெற்றியில் திருநீறு மற்றும் குங்குமம் இட்ட மாணவியை, அவமரியாதை செய்த பள்ளி நிர்வாகத்தை எதிர்த்து, பா.ஜ.க மற்றும் இந்து முன்னணி, கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளது.

கலைவாணி என்ற பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவி, தென்காசி மாவட்டம் பங்களா சுரண்டை பேரன் புரூக் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகிறார். இறைநம்பிக்கையில் ஊறிய இவர் நெற்றியில் திருநீறு மற்றும் நமது பெண்களின் பாரம்பரிய வழக்கமான குங்குமப்பொட்டு ஈடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

ஆனால் இந்த அரசு உதவி பெறும் கிறிஸ்துவப் பள்ளியில் அந்த செயலை பார்க்க பொறுக்க முடியாமல் கீழ்த்தரமான செயலை அரங்கேற்றி உள்ளது :

கலைவாணியிடம் அப் பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர்கள், நெற்றியிலுள்ள திருநீற்றையும், பொட்டையும் அழிக்குமாறு கண்டிக்கும் வகையில் கட்டளையிட்டுள்ளனர். ஆனால் இந்த மிரட்டலுக்கு அஞ்சாத அந்த மாணவி அழிக்க மறுத்துவிட்டாள். ஆனால் பள்ளி நிர்வாகம் இந்த மாணவியை விடவில்லை. மேலும் சக மாணவிகளை வைத்து அந்த குங்குமப் பொட்டையும் திருநீறு அழிக்க வைத்துள்ளனர்.

கலைவாணி அவளது பெற்றோரிடமும், ஊர் மக்களிடமும் தனக்கு நேர்ந்த அவமானம் கதியை பற்றி கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த மாணவியின் பெற்றோரும், ஊர் மக்களும், தென்காசி மாவட்ட இந்து முன்னணி செயற்குழு உறுப்பினர் இசக்கிமுத்து மற்றும் பாஜக பொறுப்பாளர் கந்தசாமி ஆகியோரது உதவியுடன்,அந்தக் கீழ்த்தரமான செயலை அரங்கேற்றிய கிறிஸ்தவப் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழகத்திலுள்ள ஒரு பள்ளியில், இதேபோன்று பள்ளிமாணவர்கள் கழுத்தில் ருத்ராட்சம் அணிவதை பள்ளி நிர்வாகம் கண்டித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.தற்போது இந்த அரசு உதவி பெறும் கிறிஸ்துவப் பள்ளியில் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கதாக அமைந்துள்ளது. இந்த சம்பவங்களை பார்க்கும் பொழுது தமிழக கல்வி நிலையங்களில் மதப்பிரச்சாரம் ஏகபோகமாக நடைபெறுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்து வருகிறது.

Dhinasari

Next Story
கதிர் தொகுப்பு
Trending News