நீட்'டை வைத்து அரசியல் செய்யும் கட்சிகளுக்கு மத்தியில், மானவர்களுக்கு 'நீட்' பயிற்சி கொடுத்து தேர்ச்சி பெற வைத்த இந்து முன்னணி!
By : Dhivakar
இந்து முன்னணி அமைப்பு சார்பில் நடத்தப்படும் நீட் பயிற்சியகத்திலிருந்து, 2 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
"நீட்" என்னும் பொது நுழைவுத்தேர்வு மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் ஆகும். பணம் படைத்த மாணவர்களே லட்சக்கணக்கில் தனியார் கல்லூரிகளுக்கு நன்கொடையளித்து, செலவு செய்து மருத்துவம் பயின்று வந்த நிலையில், அவ் விதியை மாற்றி ஏழை எளிய மாணவர்களும் நீட் தேர்வு மூலம் எளிதாக மருத்துவப் படிப்புக்கு தேர்வாகி வருகின்றனர்.
அரசு மாணவர்களும் கிராமப்புற மாணவர்களும் சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, "நீட் தேர்வை எதிர்த்து அரசியல் செய்த அரசியல்வாதிகளை வாயடைக்க வைத்தனர்.
இந்து முன்னணி அமைப்பு சார்பில், சென்னை அசோக் நகரில் "ஆஞ்சநேயர் பக்த சபா" வில் நீட் தேர்வு பயற்சியகம் இயங்கிவருகிறது. இப்பயிற்சியகத்திலிருந்து நீட் தேர்வுக்கு இரண்டு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுவுள்ளனர்.
நீட் தேர்வை வெற்றி கொள்ள வேண்டுமென்று மாணவர்கள் கனவு காணும் வேலையில், அவர்களின் கனவை நிஜாமாக்கும் இந்து முன்னணி அமைப்புக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.