கோவையில் அரசாங்க நிலத்தை ஆக்கிரமிக்கும் CSI சர்ச்: ஆட்சியரிடம் இந்து முன்னணி புகார்!
கோவை பேரூர் போஸ்டல் காலணியில் அமைந்திருக்கும் சிஎஸ்ஐ சர்ச் நிர்வாகம் அரசாங்க நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி செய்வதாக இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
By : Thangavelu
கோவை பேரூர் போஸ்டல் காலணியில் அமைந்திருக்கும் சிஎஸ்ஐ சர்ச் நிர்வாகம் அரசாங்க நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி செய்வதாக இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
சமீபகாலமாக கோயில் மற்றும் அரசுக்கு சொந்தமான நிலங்களை சர்ச் வைத்துள்ளவர்கள் ஆங்காங்கே ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவை சேர்ந்தவர்கள் அவ்வப்போது சுட்டிக்காட்டி அவர்கள் மீது புகார்கள் அளித்து வருவது வாடிக்கையாக உள்ளது.
கோவை பேரூர் போஸ்டல் காலணியில் அமைந்துள்ள C.S.I சர்ச் நிர்வாகம் அரசாங்க தரிசு நிலத்தை ஆக்ரமிக்க முயற்சி செய்வதை கண்டித்து
— Hindu Munnani (@hindumunnaniorg) December 6, 2021
கோவை மாவட்ட ஆட்சியரிடம் இந்துமுன்னணி புகார் மனு #இந்துமுன்னணி#கோவை pic.twitter.com/ig0tNZSvI9
அதே போன்று தற்போது கோவை நகரில் நடைபெற்றுள்ளது. பேரூர் போஸ்டல் காலணியில் அமைந்திருக்கும் சிஎஸ்ஐ சர்ச் நிர்வாகம் அரசுக்கு சொந்தமான தரிசு நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி செய்து வருகின்றது என கூறப்படுகிறது. இது பற்றி தகவல் அறிந்த இந்து முன்னணி அமைப்பினர் உடனடியாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகாராக அளித்துள்ளனர். ஆக்கிரமிப்பில் ஈடுபடும் சர்ச் நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Source, Image Courtesy: Twiter