நெல்லை மாவட்டத்தில், அரசு அதிகாரிகளால் அப்புறப்படுத்தப்பட்ட விநாயகர் சிலை ! இந்து முன்னணி மற்றும் பொது மக்கள் போராட்டம் !
By : Dhivakar
நெல்லை மாவட்டத்தில் அரசு அதிகாரிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலை அப்புறப்படுத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக தமிழகத்தில் இந்து கடவுளர்கள் சிலைகளின் மீது தாக்குதல்கள் அரங்கேறி வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில்,
திருநெல்வேலி மாவட்டம் பெருமாள்புரம் பகுதியில் மரத்தின் கீழ் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலை இருந்து வருகிறது. விநாயகர் சிலையை அப்பகுதி இந்து மக்கள் நாள்தோறும் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதி அரசு அதிகாரிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.
பின்னர் இந்து முன்னணி அமைப்பு இப்பிரச்சனையில் தலையிட்டது. பொதுமக்களும் இந்து முன்னணியுடன் கைகோர்க்கவே, அப்பகுதியில் பல மணி நேர போராட்டம் வெடித்தது. போராட்டம் வலுவடைந்ததை தொடர்ந்து, அதிகாரிகளால் எடுக்கப்பட்ட விநாயகர் விக்கிரகம் அதே இடத்தில் பொருத்தி மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
நெல்லை மாவட்டம் பெருமாள்புரம் பகுதியில் அரசு அதிகாரிகளால் எடுக்கப்பட்ட விநாயகர் விக்ரகம் இந்து முன்னணி மற்றும் பொதுமக்களின் பல மணி நேர போராட்டத்தால் மீண்டும் அதே இடத்தில் பிரதிஷ்டை.#இந்துமுன்னணி #நெல்லை pic.twitter.com/LpOXuhyOzG
— Hindu Munnani (@hindumunnaniorg) January 1, 2022
அரசு அதிகாரிகளே, பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலையை அப்புறப்படுத்தியது தமிழகம் முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.
கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இந்து மத அடையாளங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கண்டறிந்து இந்து முன்னணியினர் குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.