மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த யோவான் சமாரியா பள்ளி தலைமை ஆசிரியர் : கைது செய்யக்கோரி பள்ளிக்கு பூட்டு போடும் போராட்டம்!
By : Dhivakar
திருநெல்வேலியில் மாணவியிடம், யோவான் சமாரியா மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதை கண்டித்து அவரை கைது செய்யக்கோரி நூதன போராட்டத்தில் ஈடுபட்டது இந்து முன்னணி அமைப்பு.
திருநெல்வேலி மாவட்டத்தில் திசையன்விளை பகுதியில் சமாரியா செயிண்ட் ஜான் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி தென்னிந்திய திருச்சபைக்கு உட்பட்ட அரசு உதவி பெறும் பள்ளி ஆகும். இப்பள்ளியில் கிறிஸ்டோபர் ஜெயக்குமார் (51) என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் பள்ளியில் பயிலும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவியிடம் கைபேசி மூலம் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்து, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது, ஏனோ தெரியவில்லை தமிழக ஊடகங்கள் இச் சம்பவத்தை பெரிதாக்கவில்லை.
இதை தொடர்ந்து இந்து முன்னணி அப்பள்ளியில் நடந்த சம்பவத்தை எதிர்த்து பள்ளிக்கு பூட்டு போடும் போராட்டத்தை அரங்கேற்றியது,
இது குறித்து இந்து முன்னணி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது : நெல்லை திசையன்விளை தூய யோவான் சமாரியா மேல்நிலைப் பள்ளியில் இந்து மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமை ஆசிரியர் ஜெயகுமாரை கைது செய்யக்கோரி பள்ளிக்கு பூட்டு போடும் போராட்டம்.