Kathir News
Begin typing your search above and press return to search.

ராமநாதபுரம் : தேர்வுக்கு சென்ற திருமணமான பெண்களிடம், தாலியை கழட்ட சொன்ன தேர்வு கண்காணிப்பாளர்!

ராமநாதபுரம் : தேர்வுக்கு சென்ற திருமணமான பெண்களிடம்,   தாலியை  கழட்ட  சொன்ன தேர்வு கண்காணிப்பாளர்!

DhivakarBy : Dhivakar

  |  15 Feb 2022 10:08 AM GMT

ராமநாதபுர மாவட்டத்தில் பட்டதாரி தேர்வுக்கு சென்ற பெண்களிடம் தாலியை கழட்டினால்தான் தேர்வுக்கு அனுமதிக்கப்படும் என்று கண்காணிப்பாளர் வற்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


ராமநாதபுரம் மாவட்டத்தில், கீழக்கரையில், தனியார் கல்லூரி ஒன்றில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வு ஆன்லைனில் நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் நேற்று தேர்வுக்கு சென்ற திருமணமான இந்து பெண்களிடம், தேர்வு கண்காணிப்பாளர் "தாலி மற்றும் மெட்டியை கழற்றி விட்டு தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டும்" என்று கட்டளையிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இக் கடலை தேர்வு எழுத வந்த திருமணமான மாணவிகளுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. பின்னர் மாணவிகள் தங்கள் கல்வி மற்றும் எதிர்காலம் கருதி தாலியை கழற்றி வைத்துவிட்டு தேர்வு மையத்திற்குள் நுழைந்தனர்.


இச்சம்பவம் அறிந்த இந்து முன்னணி அமைப்பின் ராமநாதபுரம் மாவட்ட பொதுச் செயலாளர் கே ராமமூர்த்தி இது குறித்து கூறியதாவது : தமிழர்கள் காலம் காலமாக பின்பற்றி வரும் பாரம்பரியத்தை சிதைக்கும் வகையில் தாலியை கழட்ட கூறிய தேர்வு கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களின் தாலி என்பது மிகவும் புனிதமானது இந்து பெண்களின் நம்பிக்கையை அவமதிக்கும் வகையில் இருந்துள்ளது.

இச்சம்பவம் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Twitter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News