தேனி : கிறிஸ்தவ பெண் ஒருவர் மத மாற்ற முயற்சியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு!
By : Dhivakar
தேனி மாவட்டத்தில், கூடலூர் பகுதியில், கிறிஸ்துவப் பெண் ஒருவர் இந்துக்களிடம் மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அப்பெண்ணின் மத மாற்ற முயற்சியை இந்து முன்னணி அமைப்பு தடுத்து நிறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 8 மாதங்களாக இந்து மக்களை குறிவைத்து சட்டவிரோத மதமாற்ற முயற்சி நடைபெற்று வருகிறது. பொது இடங்களிலும், இந்து கோயில்களுக்கு அருகிலும் சட்டவிரோதமாக ஜெபக்கூடம் நிறுவப்பட்டு வருகிறது என்று அனைவரும் குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் தேனி மாவட்டத்தில், கூடலூர் பகுதியில், இன்று காலை கிறிஸ்துவப் பெண் ஒருவர் இந்து மக்களிடம் கிறிஸ்துவ மதப் பிரச்சாரம் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுகிறது. இச்செய்தி அறிந்த இந்து முன்னணி பொறுப்பாளர்கள் அப்பெண்ணின் மத மாற்ற முயற்சியை முறியடித்ததாக கூறப்படுகிறது. மேலும் அப்பெண் மீது கூடலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
தேனி கூடலூரில் இன்று காலை கிறிஸ்த்துவ பெண் ஒருவர் இந்துக்களை மதமாற்ற முயற்சி. இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் மதமாற்றத்தை தடுத்து நிறுத்தி கிறிஸ்துவ பெண் மீது கூடலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்#இந்துமுன்னணி #மதமாற்றம் #மதமாற்றதடைசட்டம் #ProhibitionofConversionAct pic.twitter.com/DsIaUg4ZtT
— Hindu Munnani (@hindumunnaniorg) February 12, 2022
சமீபகாலமாக சட்டவிரோத மதமாற்ற முயற்சிகள் நடந்து வருவதும், அம்முயற்சிகளை இந்து முன்னணி அமைப்பு முறியடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது,