Kathir News
Begin typing your search above and press return to search.

"அரசுக்கு சொந்தமானது" என்றுக் கூறி விநாயகர் கோயிலை இடிப்பதா?

அரசுக்கு சொந்தமானது என்றுக் கூறி விநாயகர் கோயிலை இடிப்பதா?
X

DhivakarBy : Dhivakar

  |  8 Jan 2022 11:30 AM GMT

நாமக்கல்லில், விநாயகர் ஆலயம் ஒன்றை நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமானது என்றுக் கூறி அதனை இடிக்க முயற்சி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சாமி சிலைகள் கடுமையாக தாக்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. இதற்க்கு சிறுவாச்சூர் தொடர் சாமி சிலைகள் உடைப்பே ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும்.


பல இடங்களில் அரசு அதிகாரிகளே, "கோயில் அமைந்திருப்பது அரசுக்கு சொந்தமான இடம்" என்றுக் காரணம் கூறி இந்து கோயில்களை அகற்றி வருகின்றனர் என்று குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இக் குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் வகையில் தற்பொழுது ஒரு சம்பவம் நடந்துள்ளது.


நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் பகுதியில் ராஜவிநாயகர் ஆலயம் இருந்து வருகிறது. இக்கோயிலின் விநாயகரை அப்பகுதி மக்கள் தினந்தோறும் வழிபட்டு வருகின்றனர். அவ்வாலயம் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமானது என்ற காரணத்தால் அதை அகற்ற முயற்சி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இக்குற்றச்சாட்டு அப்பகுதி மக்களிடம் பரவவே அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இப்பிரச்சனை இந்துமுன்னணி அமைப்பினருக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர் இந்து முன்னணியினர் கோயில் இடிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே அம்முயற்சி முறியடிக்கப்பட்டது.


இதுகுறித்து இந்து முன்னணி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதியில் அமைந்துள்ள ராஜவிநாயகர் ஆலயம் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமானது என்று சொல்லி கோவிலை இடிக்க முயற்சி இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கோவிலை இடிக்கும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News