தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட காளியம்மன் கோயில்! இந்து முன்னணியிடம் மனு அளித்த ஊர் பெரியோர்கள்
By : Dhivakar
தேனி மாவட்டத்தில், காளியம்மன் கோவில் ஒன்றை, சில தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழக இந்து ஆலயங்கள் மற்றும் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவது பலகாலமாக இருந்து வருகிறது. பிரம்மாண்ட நிலப்பரப்பைக் கொண்ட இந்து ஆலயங்கள் ஆக்கிரமிப்புகளால் சுருங்கி சுருங்கி ஒரு சிறிய கோயில் போல் பல இடங்களில் காணப்படுகிறது.
இந்நிலையில் தேனி மாவட்டம், சீப்பாலக்கோட்டை பகுதியில், காளியம்மன் கோவில் ஒன்று இருந்து வருகிறது. இக்கோயிலில் அப்பகுதி மக்கள் அன்றாடம் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் இக்கோயிலை சில தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆக்கிரமிப்புகளில் இருந்து கோயிலை விடுபட வைக்க வேண்டுமென்று ஊர் மக்கள் ஒன்றுசேர்ந்து, இந்து முன்னணி அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் திரு முருகானந்தம் அவர்களிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
இது குறித்து இந்து முன்னணி வெளியிட்ட பதிவில்: சீப்பாலக்கோட்டை காளியம்மன் கோவிலை சில தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.கம்பம் நகருக்கு வருகை தந்த இந்துமுன்னணி மாநில பொதுசெயலாளர் நா.முருகானந்தம் அவர்களை ஊர் பெரியவர்கள் சந்திந்து ஆக்கிரமிப்பை அகற்ற #இந்துமுன்னணி உறுதுணையாக இருக்க வேண்டும் என மனு அளித்தனர்.