இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயிலில் அரங்கேறிய சம்பவம்!
By : Dhivakar
சேலம் மாவட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயிலில் உண்டியல் உடைக்கப்பட்டு, பணம் கொள்ளையடிக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக இந்து ஆலயங்கள், சமூக விரோதிகளால் தாக்குதலுக்குள்ளாகிறது. இது தமிழகத்திலுள்ள இந்து மத உணர்வாளர்கள் மத்தியில் மன வேதனையடைய செய்துள்ளது.
இந்நிலையில் சேலம் மாவட்டத்தில், வீரப்பம்பாளையம் பகுதியில், திம்மராய பெருமாள் ஆலயம் இருந்து வருகிறது. இவ்வாலயத்தில் அப்பகுதி இந்துக்கள் தினந்தோறும் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அக்கோயிலின் உண்டியல் உடைக்கப்பட்டு, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.இக்கோயில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்செய்தி அறிந்த இந்து முன்னணி அமைப்பு, அக்கோவிலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்த பின்னர், வழக்குப்பதிவு செய்ய முடிவு செய்துள்ளது. மேலும் இதுகுறித்து இந்து முன்னணி அமைப்பு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :
சேலம் மாவட்டம் வீரப்பம்பாளையம் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அருள்மிகு திம்மராய பெருமாள் ஆலயத்தினுடைய உண்டியல் சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டு பணம் கொள்ளை.இந்துமுன்னணியினர் நேரில் சென்று ஆய்வு. வழக்கு பதிவு செய்ய முடிவு.