"3 இந்து கோயில்களை இடிக்க முயற்சிக்கும் அரசு அதிகாரிகள்!" - இந்து முன்னணி போராட்டத்தால் கோயில் இடிக்கும் முயற்சி முறியடிப்பு !
By : Dhivakar
செங்கல்பட்டு மாவட்டத்தில் மூன்று இந்து கோயில்களை இடிக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் முயற்சி செய்வதாக இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்.
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பள்ளிக்கரணை ஏரிக்கு வெளியே மூன்று இந்து கோயில்கள் இருந்துள்ளது. அந்த கோயில்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் இடிக்க முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. இந்த செய்தி அப்பகுதி மக்கள் மற்றும் இந்து மத உணர்வாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இத்தகவல் அறிந்த செங்கல்பட்டு மாவட்ட இந்து முன்னணி அமைப்பினர் போரட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தின் விளைவாக அதிகாரிகளின் கோயில் இடிப்பு முயற்சி முறியடிக்கப்பட்டது.
இது குறித்து இந்து முன்னணி வெளியிட்ட அறிவிப்பில் : செங்கல்பட்டு மாவட்டம், பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரிக்கு வெளியே மூன்று கோயில்களை இடிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் முயற்சி. இந்து முன்னணியினர் முற்றுகைப் போராட்டத்தால் கோவில் இடிப்பு நிறுத்தி வைப்பு.
இந்து கோயில்கள் மற்றும் சாமி சிலைகள் தொடர்ந்து மர்ம கும்பலால் தாக்குதலுக்குள்ளாகிறது என்பது அனைவரும் அறிந்ததே. அனால் அரசு அதிகாரிகளே கோயில் இடிக்கும் முயற்சியில் ஈடுபடுவது வருத்தமளிக்கிறது.