Kathir News
Begin typing your search above and press return to search.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆகம விதிகளை மீறிய இந்து சமய அறநிலைத்துறை!

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆகம விதிகளை மீறிய இந்து சமய அறநிலைத்துறை!
X

DhivakarBy : Dhivakar

  |  15 Jan 2022 12:31 PM GMT

கன்னியாகுமரி அருகே கோவில் வளாகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மேடை மற்றும் ஒலிபெருக்கி பொருத்தி, நிகழ்ச்சி நடைபெற்றது, இச்சம்பவம் அக்கோயில் ஆகம விதிகளை மீறுவதாக அமைந்துள்ளது.


இந்து கோயில்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு ஆகம விதிகளின் படி அமைந்துள்ளது. ஆகம விதிகள் கொண்டுதான் கோயில்கள் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. ஆகம விதிகளை மீறுவது என்பது கோயில் முறைகளை மீறுவதற்குச் சமம்.


இந்நிலையில் கன்னியாகுமரி அருகே மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில், ஒரு சில தினங்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறை சார்பில், ஊழியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி என்ற பெயரில் கோவில் வளாகத்திற்குள் மேடை மற்றும் ஒலிப்பெருக்கி பொருத்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இது அக்கோயில் பக்தர்களை மன வேதனையடையச் செய்துள்ளது. இந்த நிகழ்வுக்கு இந்து முன்னணி அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


இது குறித்து இந்து முன்னணி அமைப்பு வெளியிட்ட செய்தி குறிப்பில்: கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் அறநிலையத்துறை ஊழியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி.கோவில் ஆகம விதிகளுக்கு எதிராக ஆலய வளாகத்தில் மேடை, ஒலிபெருக்கி அமைத்து நிகழ்ச்சி நடத்தியதற்கு இந்துமுன்னணி எதிர்ப்பு.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News