Kathir News
Begin typing your search above and press return to search.

இந்து முன்னணி சார்பில் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கெடுத்த ராணுவ வீரர்கள் ! வைரலாகும் காணொளி !

இந்து முன்னணி சார்பில் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கெடுத்த ராணுவ வீரர்கள் ! வைரலாகும் காணொளி  !

DhivakarBy : Dhivakar

  |  10 Dec 2021 2:11 PM GMT

இந்து முன்னணி சார்பில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில், ராணுவத்தினர் மக்களோடு மக்களாக அஞ்சலி செலுத்தும் நெகிழ்வான காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது, விபத்தில் வீரமரணம் அடைந்த முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ஏனைய ராணுவ வீரர்களுக்கு நாடு முழுவதும் மக்கள் தங்கள் இதய பூர்வமான அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.


இந்நிலையில் நேற்று கோவையில், இந்து முன்னணி சார்பில் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.அப்பொழுது அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவத்தினர் மக்களோடு மக்களாக இணைந்து ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய நெகிழ்வான காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News