300 ஆண்டுகள் பழமையான ஆலயங்களை அகற்றி, சமத்துவபுரம் நிறுவும் முயற்சியை முறியடித்த இந்து முன்னணி !
By : Dhivakar
சேலத்தில் 300 ஆண்டுகள் பழமையான இந்துக்கோயில்களை அகற்றி சமத்துவபுரம் நிறுவும் அரசின் முயற்சியை இந்து முன்னணி அமைப்பு தடுத்து நிறுத்தியுள்ளது.
சேலத்தில் பனங்காட்டு முனியப்பன், பெரியாண்டிச்சி அம்மன் மற்றும் வீரமாத்தி அம்மன் ஆகிய ஆலயங்கள் மக்கள் வழிபாட்டில் இருந்து வருகிறது. இந்த ஆலயங்கள் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்தது என்றும் கூறப்படுகிறது. இந்த ஆலயங்களை அகற்றி சமத்துவபுரம் எழுப்ப அரசு முயற்சித்து வருகிறது. இந்த முயற்சியை இந்து முன்னணி அமைப்பு முறியடித்துள்ளது. இது குறித்து இந்து முன்னணி வெளியிட்ட சமூக வலைதள பதிவில் :
சேலத்தில் 300 ஆண்டுகள் பழமையான பனங்காட்டு முனியப்பன், பெரியாண்டிச்சி அம்மன்,வீரமாத்தி அம்மன் ஆகிய ஆலயங்களை அகற்றிவிட்டு சமத்துவபுரம் கட்ட அரசு முயற்சி இந்து முன்னணி எதிர்ப்பின் காரணமாக சமத்துவபுரம் கட்டும் பணி தடுக்கப்பட்டு ஆலயங்கள் காக்கப்பட்டது.#இந்துமுன்னணி#வெற்றிச்செய்தி pic.twitter.com/HNsvSfBQGK
— Hindu Munnani (@hindumunnaniorg) November 22, 2021
சேலத்தில் 300 ஆண்டுகள் பழமையான பனங்காட்டு முனியப்பன், பெரியாண்டிச்சி அம்மன்,வீரமாத்தி அம்மன் ஆகிய ஆலயங்களை அகற்றிவிட்டு சமத்துவபுரம் கட்ட அரசு முயற்சி இந்து முன்னணி எதிர்ப்பின் காரணமாக சமத்துவபுரம் கட்டும் பணி தடுக்கப்பட்டு ஆலயங்கள் காக்கப்பட்டது.
என்று கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து இந்து மத அடையாளங்களுக்கு தாக்குதல் ஏற்படுத்த முயற்சி நடக்கும் பொழுது இந்து முன்னணி அந்த முயற்சிகளை தவிடுபொடி ஆக்கிவருகிறது.