இந்து முன்னணியின் முயற்சியால் வசதியற்ற இறந்த முதியவரின் உடல் நல்லடக்கம்!
By : Dhivakar
தென்காசியில் அடக்கம் செய்ய போதிய வசதி இல்லாத இறந்த முதியவரின் உடலை, இந்து முன்னணி அமைப்பின் உதவியால் உடல் தகனம் செய்யப்பட்டது.
ஒருவரது வாழ்க்கையின் பிறப்பும் இறப்பும் இன்றியமையாததாகும். அந்த வகையில் ஒருவரது உயிர் அவரது உடலை விட்டு பிரிந்த பின்னர், அந்த உடலை நல்லடக்கம் செய்வதே அந்த இறந்த மனிதருக்கு நாம் செய்யும் மரியாதையாகும்.
தென்காசி அருகே ஆயக்குடியில் முதியவரின் இறந்த உடலை நல்லடக்கம் செய்ய வசதியில்லாமல் போனது. இத்தகவல் ஆயக்குடி காவல் நிலைய அதிகாரிகளுக்கு வந்தடைந்தது. இத் தகவலை அதிகாரிகள், இந்து முன்னணியினருக்கு தெரிவிக்கவே, முதியவரின் உடலை நல்லடக்கம் செய்ய இந்து முன்னணியினர் உதவியுள்ளனர்.
இதுகுறித்து இந்து முன்னணி வெளியிட்ட டுவிட்டர் பதிவில்: தென்காசி ஆய்க்குடி அரசு மருத்துவமனையில் ஒரு முதியவர் உடல் நலக்குறைவால் இறப்பு நல்லடக்கம் செய்வதற்கு வசதியில்லாத காரணத்தால் ஆய்க்குடி காவல் நிலைய அதிகாரிகள் இந்துமுன்னணியை தொடர்பு கொண்டனர்.அழைப்பை ஏற்று தென்காசி மின் மயானத்தில் முதியவரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
தென்காசி ஆய்க்குடி அரசு மருத்துவமனையில் ஒரு முதியவர் உடல் நலக்குறைவால் இறப்பு நல்லடக்கம் செய்வதற்கு வசதியில்லாத காரணத்தால் ஆய்க்குடி காவல் நிலைய அதிகாரிகள் இந்துமுன்னணியை தொடர்பு கொண்டனர்.அழைப்பை ஏற்று தென்காசி மின் மயானத்தில் முதியவரின் உடல் தகனம் செய்யப்பட்டது.#இந்துமுன்னணி pic.twitter.com/o9VR8RQ3S7
— Hindu Munnani (@hindumunnaniorg) January 4, 2022
இந்து முன்னணியின் இந்த மகத்தான செயல் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.